வளிமண்டலவியல் திணைக்களம் இன்றைய வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மழை
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது.
சப்ரகமுவ மாகாணம் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும்.
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை வரலாம்.
காற்று
வடக்கு வடமத்திய வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படும் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடல் நிலை
சிலாபத்தில் இருந்து கொழும்பு காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பகுதிகளில் பல இடங்களில் மழை பெய்யக்கூடும். காற்றின் வேகம் மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றராக இருக்கும்.
காங்கேசன்துறையில் இருந்து மன்னார் புத்தளம் ஊடாக சிலாபம் வரையிலும் மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம். இந்த பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும்.
சிலாபத்தில் இருந்து கொழும்பு காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடலில் அலையின் உயரம் 2 முதல் 2.5 மீற்றர் வரை உயரக்கூடும்.
எனவே மேற்படி கடற்பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்பயணங்களில் ஈடுபடுவோர் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
