குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கு சென்ற படகு ஒன்றில் பயணித்த 10 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கமாண்டர் சமிந்த வலாகுலுகே தெரிவித்தார்.
இந்த படகில் 2 படகோட்டிகள் உட்பட மொத்தம் 10 பேர் பயணித்துள்ளனர்.
நேற்று பிற்பகல் 3 மணிக்கு குறிகட்டுவான் இறங்குதுறையில் இருந்து புறப்பட்ட இந்த படகு உரிய நேரத்தில் நெடுந்தீவை வந்தடையவில்லை என கடற்படைக்கு தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து உடனடியாக மீட்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. விபத்துக்குள்ளான படகில் இருந்த அனைவரையும் கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்டவர்கள் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று அந்த கடற்பகுதி மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என முன்னரே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இருந்தும் அதனை கவனத்தில் கொள்ளாமல் இந்த படகு பயணித்ததாக கடற்படை பேச்சாளர் மேலும் கூறினார்.
