இலங்கை மக்களுக்கு சற்று முன் வெளியான மகிழ்ச்சி தகவல்

 

பொதுமக்கள் தங்களது பகுதிகளில் டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை அடையாளம் கண்டு அறிவிப்பதற்கு வசதியாக தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

அவ்வாறான இடங்களை பொதுமக்கள் அடையாளம் கண்டால் அது தொடர்பில் டெங்கு நிவாரண மையத்தைத் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின்' மேலதிக செயலாளர் வலியுறுத்தியுள்ளார். 

அதற்கமைய,டெங்கு நிவாரண மையத்தின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு : 011 796 6366 அழைப்பினை ஏற்படுத்தி அறிவிக்க முடியும். 

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலில் 'கிளீன் ஸ்ரீலங்கா'செயலகம், சுகாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, முப்படைகள் மற்றும் பொலிஸார், ஊடக அமைச்சு ஆகியன இணைந்து முன்னெடுக்கும் வேலைத்திட்டம் குறித்த கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி செயலாளரின் தலைமையில் இன்று (05) நடைபெற்றது. 

தற்போது டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 

தேசிய சுகாதார அவசர செயல்பாட்டு ஊடக மையத்தின் ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் அசங்க வேதமுல்ல, டெங்கு ஒழிப்பு பிரிவின் தற்காலிக பணிப்பாளர், 'கிளீன் ஸ்ரீலங்கா' அலுவலக அதிகாரிகள், அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம், முப்படைகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர். 

இதேவேளை மேல் மாகாணத்தில் டெங்கு நோய் பரவும் அதிக அவதானமிக்க 23 வலயங்களை உள்ளடக்கிய விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை இன்று (05) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் மகரகம, கடுவெல, ஹோமாகம, கொத்தட்டுவ, பத்தரமுல்ல, பிலியந்தலை மற்றும் கொழும்பு மாநகர சபை ஆகிய டெங்கு அதிக அபாய வலயங்களில் இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. 

கம்பஹா மாவட்டத்தில் பியகம, களனி, சீதுவை, ஜா-எல, மகர, வத்தளை, நீர்கொழும்பு மற்றும் மினுவாங்கொடை ஆகிய பகுதிகளிலும், களுத்துறை மாவட்டத்தில் பாணந்துறை, பண்டாரகம, ஹொரணை, இங்குரிய மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளிலும் இந்த விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

Post a Comment