Posts

சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தத் தடை


15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க சட்ட மூலத்தைப் பிரான்ஸ் நாடாளுமன்றம் நிறைவேற்றவுள்ளது. 

இதன் மூலம் ஐரோப்பாவில் சிறுவர்களுக்கான டிஜிட்டல் வயது வரம்பை அறிமுகப்படுத்தும் முதல் நாடாகப் பிரான்ஸ் மாறவுள்ளது.

செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் 15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் புதிய சமூக வலைத்தளக் கணக்குகளைத் தொடங்குவதற்குத் தடை விதிக்கப்படும்.

அத்துடன் சிறுவர்களிடம் ஏற்கனவே உள்ள சமூக வலைத்தளக் கணக்குகளும் முடக்கப்படும்.

புதிய கல்வியாண்டு தொடக்கத்தில் இருந்து இடைநிலைப் பாடசாலைகளில் மொபைல் போன்களைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்படவுள்ளது.

டிக் டொக் (TikTok), இன்ஸ்டாகிராம் (Instagram) மற்றும் ஸ்நாப்சாட் (Snapchat) போன்ற செயலிகளால் டீனேஜ் சிறுவர்களின் மனநலம் பாதிக்கப்படுவதோடு, தற்கொலை மற்றும் போதைப்பொருள் பழக்கம் போன்ற ஆபத்தான நடத்தைகளுக்கும் அவர்கள் ஆளாக நேரிடுவதாகப் பிரான்ஸ் பொது சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

ஆன்லைன் கலைக்களஞ்சியங்கள் (Online encyclopaedias) மற்றும் கல்வி சார்ந்த தளங்களுக்கு (Educational platforms) இந்தத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

கடந்த டிசம்பர் மாதம் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்குச் சமூக வலைத்தளத் தடை விதித்த உலகின் முதல் நாடாக அவுஸ்திரேலியா மாறிய நிலையில், தற்போது பிரான்ஸும் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

Post a Comment