நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு பரவல் காரணமாக, கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் (LRH) சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் பிள்ளைகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக, பிள்ளைகளைச் சிகிச்சைக்காகவோ அல்லது கிளினிக் விஜயங்களுக்கோ அழைத்து வரும்போது 5 முக்கிய மருத்துவ ஆவணங்களை தவறாமல் கொண்டு வருமாறு பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுக்கு வைத்தியசாலை நிர்வாகம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.
நிலவும் டெங்கு சூழ்நிலை காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற வரும் பிள்ளைகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளதாக சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் பிரதீப் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.
நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், பிள்ளைகளுக்குத் தாமதமின்றி விரைவான மற்றும் திறமையான மருத்துவ சிகிச்சையை வழங்குவதை உறுதிசெய்ய பெற்றோரின் முழுமையான ஒத்துழைப்பு அவசியமாகும்.
கொண்டுவர வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்:
1. தனிநபர் சுகாதார இலக்கம் (PHN) அல்லது பார்ஃகோட் அட்டை (Barcode Card)
2. சிறுவர் சுகாதார அபிவிருத்திப் பதிவுப் புத்தகம் (CHDR) அல்லது நிறை பதிவுப் புத்தகம் (Weight Record Book)
3. மருந்து மற்றும் உணவு ஒவ்வாமை (Allergy) பற்றிய பதிவுகள்
4. கிளினிக் புத்தகங்கள் (Clinic books)
5. வைத்தியசாலை விடுவிப்பு அட்டைகள் (Discharge cards) அல்லது நோயறிதல் அட்டைகள் (Diagnosis cards)
மேலதிக விபரங்களுக்கு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் அலுவலகத்தை *011 2693711* என்ற இலக்கத்தின் ஊடாகத் தொடர்பு கொள்ள முடியும்.
