லங்கா பிரீமியர் லீக் (LPL) 2026 தொடரின் எஞ்சிய போட்டிகளிலிருந்து, தொடைத் தசைக்காயம் (Hamstring Injury) காரணமாகக் கொழும்பு கேப்ஸ் (Colombo Kaps) அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் விலகியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை கண்டி ரோயல்ஸ் (Kandy Royals) அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது குசல் மெண்டிஸுக்குத் தொடைத் தசைக்காயம் ஏற்பட்டது.
இதனால் அவர் 'ரெட்டையர்ட் ஹர்ட்' (Retire hurt) முறையில் களத்தில் இருந்து வெளியேறினார்.
காயம் காரணமாக 2026 LPL தொடரின் எஞ்சிய போட்டிகள் அனைத்தையும் அவர் இழக்க நேரிட்டுள்ளது.
புதிதாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட கொழும்பு கேப்ஸ் அணியை ஆரம்பப் போட்டிகளில் வெற்றிகரமாக வழிநடத்திய இவர், அணியின் முக்கிய துடுப்பாட்ட வீரராகவும் விக்கெட் காப்பாளராகவும் விளங்கியதால், இவரது விலகல் கொழும்பு அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
