Posts

தேசிய அடையாள அட்டை இல்லையா? - பரீட்சைத் திணைக்களம் அதிரடி!


2026 ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தரப் (G.C.E. O/L) பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்குத் தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாதது ஒரு தடையாக இருக்காது எனப் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2026 ஜூலை 3 ஆம் திகதி முதல் ஜூலை 23 ஆம் திகதி வரை இணையவழி (Online) மூலமாக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

விண்ணப்பதாரர்கள் அனைவரும் ஜூலை 23 ஆம் திகதிக்கு முன்னர் தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

எந்தக் காரணம் கொண்டும் இறுதித் திகதி நீடிக்கப்படமாட்டாது எனத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

அதிகாரப்பூர்வ பரீட்சை அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களைக் கவனமாகப் பின்பற்றி படிவங்களைச் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலதிக விபரங்கள் மற்றும் சந்தேகங்களுக்குப் பின்வரும் எண்களைத் தொடர்பு கொள்ளலாம்:

Hotline : 1911

தொலைபேசி எண்கள்: 011-2784537, 011-2786616, 011-2784208

தொலைநகல் (Fax): 011-2784422

Post a Comment