காணி கொள்முதல் தொடர்பான வழக்கு விசாரணைக்காக இரண்டாவது முறையாகவும் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதை அடுத்து, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான பிடியாணையை மாத்தறை பிரதம நீதவான் சதுர திஸாநாயக்க இன்று (21) நீடித்துள்ளார்.
மாத்தறை, எலியகந்த வீதியிலுள்ள பிரவுன்ஸ் ஹில் (Browns Hill) பகுதியில் 60 மில்லியன் ரூபா பெறுமதியான ஒன்றரை ஏக்கர் தென்னந்தோட்டக் காணியைக் கொள்முதல் செய்தமை தொடர்பிலேயே இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
பசில் ராஜபக்ஷ தொடர்ந்து நீதிமன்றில் ஆஜராகாமல் தவிர்த்து வந்ததன் காரணமாகவே அவருக்கு வழங்கப்பட்ட பிடியாணையை நீடித்து நீதவான் உத்தரவிட்டார்.
முன்னாள் அமைச்சரின் நான்கு பிணையாளிகளுக்கும் (Guarantors) கடும் எச்சரிக்கை விடுத்த பிரதம நீதவான், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதை உறுதிசெய்யுமாறு பணித்துள்ளார்.
தவறும்பட்சத்தில், அவர்களின் பிணைப் பணத்தை ஏன் பறிமுதல் செய்யக்கூடாது என்பதற்கான காரணத்தை விளக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
