ஹோமாகம, கட்டுவன கைத்தொழில் வலயத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹோமாகம கட்டுவன பகுதியில் இயங்கி வரும் தொழிற்சாலை ஒன்றில் இந்தத் தீ விபத்து சம்பவித்துள்ளது.
குறித்த விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் மற்றும் உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் குறித்த விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
இது தொடர்பாகப் பொலிஸாரும் அதிகாரிகளும் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
