Posts

க.பொ.த சாதாரண தர பரீட்சை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு


2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பது தொடர்பான முக்கிய அறிவிப்பொன்றை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இம்முறை பரீட்சைக்கான விண்ணப்பங்களை கோரும் பணிகள் நேற்று (ஜூலை 03) முதல் இணையவழியூடாக (Online) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி இம்மாதம் ஜூலை 23 ஆம் திகதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை முறைமையின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவர்கள், தத்தமது பாடசாலை அதிபர்கள் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

தனிப்பட்ட முறையில் (Private) பரீட்சைக்கு தோற்றவுள்ள விண்ணப்பதாரர்கள், அறிவுறுத்தல்களுக்கு அமைய Online மூலம் தங்களின் விண்ணப்பங்களை நேரடியாக சமர்ப்பிக்க முடியும்.

இறுதி நேரத் தாமதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் அனைவரும் ஜூலை 23 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Post a Comment