யாழ் பல்கலையில் பாலியல் துஷ்பிரயோகம்-வெடித்தது போராட்டம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டு குறித்து பேராசிரியர் உள்ளிட்ட இருவருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகளை, காலத்தை இழுத்தடிக்காமல் துரிதப்படுத்துமாறு கோரி, பல்கலைக்கழக முன்றலில் போராட்டம் நடத்தப்பட்டது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் இன்றைய தினம் வியாழக்கிழமை (9) காலை "பாலியல் வன்முறைகளுக்கு எதிரான மக்கள் இயக்கம்" எனும் அமைப்பின் அழைப்பில் இப்போராட்டம் இடம்பெற்றது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் உள்ளிட்ட இருவர் மாணவிகளை துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கினார்கள் எனும் குற்றச்சாட்டில், பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறான நிலையில், காலத்தை இழுத்தடிக்காமல், விசாரணைகளை துரிதமாக நடத்துமாறு கோரி, பல்கலைக்கழகத்துக்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது


Post a Comment