உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாயால் இன்று குறைந்துள்ளதாக, அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, தற்போதைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 384,000 ரூபாயாக பதிவாகியுள்ளது.
அத்துடன் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 353,300 ரூபாயாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.
அத்துடன், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,000 ரூபாயாகவும்,22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,163 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
.jpeg)