ஹொரணையில் உள்ள அரச வங்கி ஒன்றில் 30.5 மில்லியன் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், அந்த வங்கியின் உதவி முகாமையாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 3-ஆம் திகதி பிற்பகல் 2:55 மணியளவில் வங்கியின் ஊழியர் ஒருவர், வங்கியின் பின் பக்கக் கதவினால் தமது இரு கைகளிலும் இரண்டு பணப்பைகளை எடுத்துச் சென்றபோது, அங்கு வந்த நபர் ஒருவர் அந்த இரண்டு பணப் பைகளையும் பலவந்தமாகப் பறித்துக் கொண்டு தப்பியோடியிருந்தார்.அப்பணம், சம்பந்தப்பட்ட வங்கியின் ஏடிஎம் (ATM) இயந்திரங்களில் வைப்புச் செய்வதற்காக எடுத்துச் செல்லப்பட்ட 30.5 மில்லியன் ரூபாய் பணமாகும்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளின் அடிப்படையில் குறித்த வங்கியின் உதவி முகாமையாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
