நவகிரகங்களில் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். மேலும் இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியும் கூட.
இப்படிப்பட்ட புதன் இதுவரை தனது சொந்த ராசியான மிதுன ராசியில் பயணித்து வந்தார். இந்நிலையில் ஜூன் 22 ஆம் திகதி, கடக ராசிக்குள் நுழைந்துள்ளார். இந்த கடக ராசியில் ஏற்கனவே குருவும், சுக்கிரனும் உள்ளனர். இதனால் இந்த புதன் பெயர்ச்சியானது சற்று சிறப்பானதாக கருதப்படுகிறது.
இப்போது கடகத்தில் நடக்கும் புதன் பெயர்ச்சியால் அதிர்ஷ்ட மழையில் நனையப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் பார்க்கலாம்.
மேஷம்: இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வருமான வழிகள் உருவாகும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மன அழுத்தம் குறையும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணியிடத்தில் இந்த ராசிக்காரர்களின் செயல்திறன் பாராட்டப்படும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் படிப்படியாக முடிவடையும். சொத்து தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன்களைப் பெறக்கூடும்.
கன்னி: பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். நீண்ட கால பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வியாபாரிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். ஆரோக்கியம் வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். நிதி நிலைமை வலுவடையும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
விருச்சிகம்: இந்த ராசிக்காரர்களின் நிதி நிலைமை படிப்படியாக வலுவடையும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவார்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், கடினமான பணிகள் கூட எளிதில் முடிவடையும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்
