அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலையில் உடற் பயிற்சி சிகிச்சையாளராக கடமையாற்றிய தர்ஷனி, கனடாவில் புதிய வாழ்க்கையை தொடங்கும் கனவுடன் எதிர்காலத்தை திட்டமிட்டிருந்தார்.
அந்த நம்பிக்கையில், காதலனிடம் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் பணத்தை வழங்கியதுடன், உத்தியோகத்தில் இருந்தும் விலகியதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர், சம்பவம் இடம்பெற்றதை தொடர்ந்து, தர்ஷனியின் குடும்பத்தினருக்கு தர்ஷனி கனடா சென்று விட்டதாக நம்ப வைக்க சந்தேகநபரால் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் , சந்தேகநபர் பல்வேறு இடங்களில் தங்கி இருந்து அதிகாரிகளின் கவனத்தில் படாமல் இருக்க திட்டமிட்டதாகவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
மேலும், இந்தச் சம்பவத்துக்குப் பிறகு ஏற்பட்ட பயத்தை சமாளிக்க, பாடல்களை முணுமுணுத்துக் கொண்டு காரில் உடலத்தை கொண்டு சென்றார் என்று சந்தேகநபர் வாக்குமூலம் அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவத்தில், சந்தேகநபருக்கு உதவியதாகக் கூறப்படும் மேலும் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தொழில்நுட்ப ஆதாரங்கள், தொலைபேசி தகவல் பகுப்பாய்வு மற்றும் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்புகளின் மூலம் கைது நடவடிக்கைகள் சாத்தியமாகி உள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
