இலங்கையில் இன்று (11) தங்க விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 24 கரட் தங்கத்தின் விலை ஒரு பவுணுக்கு 8,000 ரூபாயால் குறைந்துள்ள நிலையில் தற்போதைய சந்தை நிலவரத்தின் அடிப்படையில் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 370,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
அதேவேளை, 22 கரட் தங்கம் ஒரு பவுண் 340,400 ரூபாயாக விற்பனையாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 கரட் தங்கம் ஒரு கிராம் 46,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராம் 42,550 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுவதாக நகையக வியாபாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச தங்கச் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்கள் உள்ளிட்ட காரணிகள் உள்நாட்டு தங்க விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சந்தை தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
