பள்ளத்தில் பாய்ந்த பேரூந்து-31 பேர் பலி

 

கிழக்கு ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியாவின் வடக்கே அம்ஹாராவின் டெஸ்ஸி பகுதியில் இருந்து தலைநகர் அடிஸ் அபாபாவை நோக்கி பயணிகள் பஸ் ஒன்று நேற்று (15) பயணித்துக்கொண்டிருந்தது. 

பஸ் கொம்போல்சா எல்லைக்குட்பட்ட மலைப்பாங்கான வளைவுப் பாதையில் சென்றுகொண்டிருந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென செங்குத்தான பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் பஸ்ஸில் பயணித்தவர்களில் 31 உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். அளவுக்கு மீறி ஆட்கள் பஸ்ஸில் இருந்துள்ளனர். 

மேலும் உள்நாட்டு மோதல்களால் அப்பகுதியில் போதிய அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. எனவே ஆம்புலன்ஸ் மற்றும் மீட்பு குழுக்கள் வருவதிலும் சிக்கல் ஏற்பட்டது. 

அங்கிருந்த உள்ளூர் மக்களே களத்தில் இறங்கி காயமடைந்தவர்களை மீட்டு அவ்வழியே வரும் வாகனங்களில் ஏற்றி வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர். 

உரிய நேரத்தில் முதலுதவி மற்றும் வைத்திய சிகிச்சை கிடைக்காத காரணத்தினாலேயே உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாக உயர்ந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment