இந்தியாவில் பரங்கிமலை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் நண்பர்களால் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெற்றோர் இதுகுறித்து போரூர் அனைத்து மகளிர் பொலிஸில் புகார் செய்தனர்.பொலிசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக சேர்த்தனர். பொலிசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.
சிறுமியின் நண்பருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரைப் பார்ப்பதற்காக குன்றத்தூர் பகுதிக்கு சென்று உள்ளார். அங்கு அவரது நண்பர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறி சிறுமியை ஏற்றிகொண்டு சென்றார்.
ஆனால் அவர் காலி இடத்திற்கு சிறுமியை அழைத்துச் சென்றார். மேலும் தனது நண்பர்கள் சிலரையும் அவர் அங்கு வரவழைத்தார்.
பின்னர் அவர்கள் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தப்பி சென்று இருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக சிறுமியின் நண்பர் உள்ளிட்ட 6 பேரை பொலிசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
