யாழில் பொலிஸாரை மிரட்ட கழுத்தை அறுத்த பெண்; அலறவிட்ட தமிழ் பொறுப்பதிகாரி!

யாழில் பொலிஸாரை மிரட்ட கழுத்தை பெண் ஒருவர் கழுத்தை பிளேட்டால் அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தாவடி பகுதியில் வன்முறை கும்பல்களுடன் தொடர்புபட்டு   வந்ததாக சந்தேகிக்கப்படும் 17 வயது இளைஞன் நேற்று (28)  கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞன் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்ட நிலையில்  பொலிஸ் விலையம்  வருகை தந்த இளைஞனின் தாயார் பொலிஸாரை மிரட்ட  தனது கழுத்தை தானே பிளேட் மூலம் அறுத்துள்ளார்.

இதனையடுத்து  அவரை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக  குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில்  இவ்வாறு பொலிஸாரை மிரட்டுவதால் எந்தப் பயனும் இல்லை என்றும் , இவ்வாறு கழுத்தை அறுத்து இறந்திருந்தால் பிரேத பரிசோதனையின் பின் சடலம் கணவனிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் என்றும் சுன்னாகம்   பொறுப்பதிகாரி சிவானந்தம் நிதர்சன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்  கைது செய்யப்பட்ட இளைஞரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில்  பிள்ளைகளை  அவர்கள் இஸ்டம்போல வளரவிடும் சில  பெற்றொர்கள் தங்க்கள் பிள்ளைகள்  குற்றசெயல்களில் ஈடுபடுவதை  கண்டும் காணாதது போல  விடுவதுடன், இவ்வாறு  பொலிசாரையே மிரட்டுவது வேதனைக்குரியதாகும் என சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்

Post a Comment