ஹோமகமவில் உள்ள ஒரு எரிபொருள் நிலையத்தில், மோட்டார் சைக்கிளில் வந்த நபர் தன் மீது எரிபொருளை ஊற்றிக் கொண்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இதனையடுத்து, எரிபொருள் நிலைய ஊழியர்கள் அவரைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.
அத்தோடு, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிஸார் அந்த நபரை கைது செய்ததுடன் மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
