மற்றுமொரு கோர விபத்து-இளைஞன் பலி

இரத்தினபுரி - பலாங்கொடை வீதியின் பத்கம்கொட சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பலாங்கொடையிலிருந்து பெல்மடுல்ல நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி மின் கம்பம் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

 

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கஹவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

 

இவ்வாறு உயிரிழந்தவர் பெல்மடுல்ல பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

 

சம்பவம் தொடர்பில் பெல்மல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Post a Comment