யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் இரு வீடுகளில் ஒரு கோடியே 15 இலட்ச ரூபாய் பணம் மற்றும் 25 பவுண் நகைகள் என்பவை களவாடப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த திருடர்கள் , வீட்டில் இருந்த ஒரு கோடியே 15 இலட்ச ரூபாய் பணத்தினை திருடி சென்றுள்ளனர்.
வீட்டின் சமையலறை ஊடாக புகுந்த திருடர்களே வீட்டில் இருந்த பணத்தை களவாடி சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை, உடுப்பிட்டி பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த 25 பவுண் தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர்.
வீட்டு உரிமையாளர் காலையில் எழுந்த போது , வீட்டின் முன் பக்க கதவுகள் திறந்து இருப்பதனை அவதானித்து , நகைகள் வைத்த இடத்திற்கு சென்று பார்த்த போது , நகைகள் களவாடப்பட்டு இருந்துள்ளது.
நகைகள் களவாடப்பட்டமை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
