பிரான்ஸில் அதிர்ச்சி: ஈழத்தமிழர் ஒருவர் பொலிஸாரினால் சுட்டுக்கொலை!

 

பிரான்ஸ் பாரிஸின் புறநகர் பகுதியான சென்சன்ட் டெனிஸ் (Seine-Saint-Denis) மாவட்டத்தில் உள்ள போனி (Bondy) நகரில் நேற்று ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. முல்லைத்தீவு மல்லாவிப் பகுதியைச் சேர்ந்த ஈழத்தமிழர் ஒருவர் பிரெஞ்சு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி  உயிரிழந்துள்ளார்.

சம்பவம் என்ன? 

போனி நகரின் ஆக்டர் பேர்லியோஸ் (Hector Berlioz) தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் அண்டை வீட்டாருக்குள் கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. 

சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்தபோது, அங்கிருந்த குறித்த இலங்கை நபர் இருவரை கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார்.

பொலிஸாரைக் கண்டதும், அவர் கையில் இரண்டு கத்திகளுடன் பொலிஸ் அதிகாரிகளையும் தாக்க முற்பட்டுள்ளார். 

ஆபத்தை உணர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவர், முதலில் அவரைத் தனது காலால் உதைத்து பின்னுக்குத் தள்ளியுள்ளார். எனினும், சற்றும் பின்வாங்காத அந்த நபர் மீண்டும் கத்திகளுடன் பொலிஸாரை நோக்கிப் பாய்ந்துள்ளார்.

முடிவு: 

வேறு வழியின்றி, தற்காப்புக்காக (Self-defense) பொலிஸார் அந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். துப்பாக்கிக் குண்டு பாய்ந்து படுகாயமடைந்த அவருக்கு அவசர மருத்துவப் படையினர் சம்பவ இடத்திலேயே தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்த அவரது அண்டை வீட்டார் இருவருக்கும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. 

இந்தச் சம்பவம் தொடர்பாக பாபினி (Bobigny) அரசு வழக்கறிஞர் அலுவலகம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Post a Comment