தங்கம் – வெள்ளி சந்தையில் திடீர் மாற்றம் ; நகை பிரியர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

 

உலகச் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளன.

அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,612.61 அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளது.

இது கடந்த தினத்துடன் ஒப்பிடுகையில் 64.75 டொலர்கள் (-1.38%) வீழ்ச்சியாகும்.

இதேவேளை வெள்ளியின் விலையிலும் இன்று பாரிய சரிவு ஏற்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 3.33 டொலர்களினால் (-3.93%) குறைந்து, 81.4 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

உலகச் சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலை மாற்றங்கள் காரணமாக, உள்ளூர் சந்தையிலும் ஆபரணத் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். 

Post a Comment