வித்தியா கொலை வழக்கு கைதி விபரீத முடிவு

 

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியான பூபாலசிங்கம் ஜெயக்குமார் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். 

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த 46 வயதுடைய அவர் நேற்று (24) இரவு சிறைச்சாலைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. 

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா 2015-ஆம் ஆண்டு மே மாதம் 13-ஆம் திகதி கூட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். 

இந்த வழக்கில் 2017-ஆம் ஆண்டு யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் 7 பேருக்கு மரண தண்டனை விதித்தது. 

அதன்பின்னர் இந்த தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றமும் உறுதி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment