மது போதையில் சிறுவர்கள் இளைஞனுக்கு துடிதுடிக்க அரங்கேற்றிய கொடூரம்

 

சேலம் மாவட்டம் மணியனூரை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவனும், அதே பகுதியைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவனும் மற்றும், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவனும் சேர்ந்து இளைஞன் ஒருவரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நண்பர்கள் மூவரும் நேற்று இரவு 8 மணிக்கு கெஜ்ஜல் நாயக்கன்பட்டி காட்டுவளவு பகுதிக்கு சென்று ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.

அவர்களுடன் சீலநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த 19 வயதான இளைஞனும் சேர்ந்துள்ளார்.

போதை தலைக்கேறியதும் மூன்று சிறுவர்களுக்கும் இளைஞனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த சிறுவர்கள் இளைஞனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இளைஞரை குத்தியும், முகத்தை சிதைத்தும் கொடூரமாக கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை தரையில் கிடத்தி வீடியோ எடுத்து ஆக்ரோஷமாக கூச்சலிட்டுள்ளனர்.

சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஒன்றுதிரண்டு அங்கு சென்றுள்ளனர். நிலைமையை அறிந்த மக்கள் தப்பியோட முயன்ற சிறுவர்களை மடக்கிப் பிடித்து மல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் கோகுல் மற்றும் மூன்று சிறுவர்களும் அடிக்கடி சந்தித்து மது அருந்தி வந்தது தெரியவந்தது. சிறுவர்கள் சிகரெட் பிடித்ததை இளைஞன் அவர்கள் வீட்டில் சொன்னது தொடர்பாக அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது

Post a Comment