வவுனியாவில் இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த பயங்கரம்

 

வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் ஒருவரை கடத்தி தாக்குதலுக்கு உட்படுத்தியதாக காவல்துறையில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் செல்வதற்காக நேற்று(07.05) பிற்பகல் 3 மணியளவில் பேரூந்து ஒன்றில் ஏறி தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவரிடம் இருந்து முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் கைத் தொலைபேசியை பறித்துக் கொண்டு பேரூந்தில் இருந்து கீழே இறங்கியுள்ளார்.

இதன்போது அங்கு நின்ற முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் சிலர் குறித்த இளம் குடும்பஸ்தரை முச்சக்கர வண்டியில் ஏறுமாறு கூறி ஏற்றிக் கொண்டு வவுனியா, புதிய பேரூந்து நிலையத்திற்கும், சோயா வீதிக்கும் இடையிலுள்ள வயல் வெளி பகுதிக்கு அழைத்து சென்று தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதனைதொடர்ந்து, அவர்களால எழுதப்பட்ட கடிதம் ஒன்றில் கையொப்பமும் பெற்றதாகவும், தொலைபேசியில் இருந்த சில ஆவணங்களும் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் பின் மாலை 6.30 இற்கு பின்னர் தன்னை விடுவித்ததாகவும் பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில வவுனியா காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதைடுத்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Post a Comment