கிளிநொச்சியில் விசேட தேவையுடைய சிறுமியை பல தடைவகள் பாலியல் நாசம் செய்த அயல் வீட்டு காம மிருகம்

 

கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாயவனூர் கிராமத்தில் 13 வயதுடைய சிறுமி ஒருவர் பல தடவைகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

விசேட தேவைக்குட்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த அந்த சிறுமி, தனது வீட்டுக்கு அருகில் வசித்து வந்த ஒருவரால் தொடர்ச்சியாக பல தடவைகள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் கடந்த வாரம் இடம்பெற்றிருந்த போதிலும், அதனை மறைப்பதற்கான முயற்சிகள் சிலரால் மேற்கொள்ளப்பட்டதாகவும், அப்பகுதியில் உள்ள கிராம மட்ட அமைப்புகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தவில்லை எனவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Post a Comment