களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போசிரிபுர பிரதேசத்தில் நேற்று (04) மதியம் தந்தைக்கும் மகளுக்கும் இடையில் நிலவிய நிலத் தகராறு காரணமாக இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
தந்தை இரும்புத் தடியால் தாக்கியதில் பலத்த காயமடைந்த மகள் நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
கொலைச் சம்பவம் தொடர்பில் 63 வயதுடைய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் களுத்துறை வடக்கு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
