தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 83 தொகுதிகளை கைப்பற்றி முதன்மைக் கட்சியாக வெற்றி பெற்றுள்ளது.
ஆனால் ஆட்சி அமைப்பதற்கான 118 இடங்களை பிடிக்க முடியவில்லை. இதற்கு இன்னும் 35 இடங்கள் தேவை.மேலும் விஜய் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும். இதனால் தமிழக வெற்றிக் கழகம் பிடித்த இடங்களில் எண்ணிக்கை 82 ஆகும். இதனால் ஆட்சியமைக்க 36 இடங்களில் தேவைப்படும்.
தனிப்பெரும்பான்மை கட்சி என்பதால் விஜய், ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரலாம். ஆளுநர் அழைப்பு விடுத்தால், சட்டசபையில் முதலமைச்சராக பதவி ஏற்று பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். அப்போது, மற்ற கட்சிகள் மறைமுகமாக அல்லது நேரடியாக ஆதரவு கோரலாம்.
இந்நிலையில், இரவு 11.30 மணி அளவில்,
தமிழக வெற்றிக் கழகம் - 83 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
திமுக கூட்டணி - 73 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
அதிமுக கூட்டணி - 46 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
நாம் தமிழர் - எந்த ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.
அதிமுக மற்றும் திமுத கூட்டணியாக இணைந்து ஆட்சியை கைப்பற்ற போவதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
