வடக்கு ஆளுநரின் அதிரடி பணிப்புரை-வீதியில் தேங்கிய வெள்ள நீர் வெளியேறியது-விரைவில் வீதியும் புனரமைப்பு-நன்றி தெரிவித்த கிராம மக்கள்{படங்கள்}

 மாதகல் சகாய புரத்தில் உள்ள பாலக்கட்டை வெள்ளவாய்க்கால் வீதியில் அனர்த்தத்தினால் ஏற்பட்ட வெள்ளநீரினை அகற்றுமாறும் , நிரந்தரமான தீர்வினை பெற்றுக் கொடுக்கும்படியும் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கிய வடமாகாண ஆளுநர் அவர்கட்கும், உடனடியாக களவிஜயம் மேற்கொண்டு நீரினை வெளியேற்ற உதவி செய்த உள்ளூர் திணைக்கள அதிகாரிகள், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள், பிரதேச செயலாளர், மற்றும், பிரதேச சபையின் தவிசாளர்,பிரதேச சபையின் செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள்.சண்டிலிப்பாய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவருமாகிய பாராளுமன்ற உறுப்பினர், மானிப்பாய் தொகுதி தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர், மாதகல்J/150 கிராமசேவகர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம மட்ட அமைப்பாளர், பிரதிநிதிகள் அனைவருக்கும்  அத்தோடு எமது இடர்பாடுகளை அனைத்து அதிகாரிகளுக்கும் தெளிவான முறையில் வெளிப்படுத்திய தமிழ் பிளஸ் ஊடகத்திற்கும் செய்தியாளர்கள் அனைவருக்கும் கிராமிய மக்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறார்கள்.

மேலும் மிக விரைவில் வீதியினை திருத்தம் செய்து தருவதாக மக்களிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.













Post a Comment