சற்று முன் கிளிநொச்சியை உலுக்கிய விபத்து-இளம் தாய் சம்பவ இடத்திலே பலி{படங்கள்}

 கிளிநொச்சி, உருத்திரபுரம் - கரடிபோக்கு வீதியில் இன்று (25) மதியம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சண்முகம்கஜிதா (32 வயது)என்னும் இளம்தாய்ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 பாடசாலை முடிந்து மகளை அழைத்துக்கொண்டுவர தாயொருவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, அதிவேகமாக வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

  தாயார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய இளைஞர்களில் ஒருவரும் காயமடைந்துள்ளார்.

 சம்பந்தப்பட்ட இளைஞர்கள் பெரியளவிலான மோட்டார் சைக்கிளில் அதிவேகமாகச் சென்றதே விபத்திற்குக் காரணம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





Post a Comment