கிளிநொச்சியில் நள்ளிரவில் ஏற்பட்ட பதற்றம்-நால்வர் வைத்தியசாலையில்

 

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிளிநொச்சி விவேகானந்தர் நகர் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். 

நேற்று இரவு,  இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் நான்கு பேர் காயமடைந்துள்ள நிலையில், ஒருவர் கிளிநொச்சிவைத்திய சாலையிலும் மற்றும் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையிலும் மற்றும் ஒரு நபர் அனுராதபுரம் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

குறித்த சம்பவமானது முற்பகை காரணமாக ஏற்பட்ட தொலைபேசி உரையாடல் முற்றியதன் காரணமாகவே இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்த சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் கூறிய ஆயுதங்கள் தடையை பொருட்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. 

இவ்விடயம் தொடர்பாக , யாரும் பொலிஸாரால் கைது செய்யப்படவில்லை, மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 


Post a Comment