மொனராகல, சிரிபுரகம பகுதியில் ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்திருந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் உயிரிழந்துள்ளார்.
விபத்தின் போது சகோதரி உயிரிழந்த நிலையில் கடந்த 11ஆம் திகதி சகோதரன் உயிரிழந்துள்ளார். சிரிபுரகம பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சாமிக தேஷான் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதிவிட்டு, அதன் பெறுபேறுகளுக்கு காத்திருந்த மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 3ஆம் திகதி, சாமிக தேஷான் தனது சகோதரியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
