அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பிறந்து 6 நாட்களான ஆண் சிசு ஒன்றை வைத்தியசாலை அறையில் தாய் கைவிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்னர் பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இந்த தாய், குழந்தையைப் பிரசவித்த பின்னர், 6 நாட்களின் பின்னர் தப்பிச் சென்றுள்ளார்.
வைத்தியசாலையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களுக்கமைய, குறித்த தாய் இராஜாங்கனை பகுதியை சேர்ந்த 31 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைவிட்டு செல்லப்பட்டுள்ள சிசு, அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் செவிலியர்களின் பராமரிப்பில் வைக்கப்பட்டுள்ளது.
