யாழில் பிறந்து 24 நாட்களேயான ஆண் குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்பற்று - பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இது குறித்து மேலும் தெரிய வருகையில்,
குறித்த குழந்தைக்கு நேற்றிரவு காய்ச்சலுடன் வலிப்பு ஏற்பட்டது.
இதன்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை குழந்தை அங்கேயே உயிரிழந்துள்ளது.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
