பற்றி எரிந்த தொழிற்சாலை-21 பேர் உடல் கருகி பலி

 


லியுயாங் நகரில் அமைந்துள்ள ஹுவாஷெங் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். 

நேற்று மாலை ஏற்பட்ட இந்த விபத்தில் தொழிற்சாலையில் இருந்த 60 க்கும் மேற்பட்டோரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

தீ விபத்து ஏற்பட்டவுடன் தொழிற்சாலையைச் சுற்றியுள்ள 3 கி.மீ சுற்றளவில் இருந்த அனைவரும் மீட்புக் குழுவினரால் வெளியேற்றப்பட்டனர். 

இந்நிலையில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காகவும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காகவும் சுமார் 500 பணியாளர்களை அதிகாரிகள் ஈடுபடுத்தியுள்ளனர். 

கட்டிடத்திற்குள் சிக்கியுள்ளவர்களைக் கண்டறிய ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டன. 

தீவிபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்பதுடன் பொலிஸார் விசாரித்து வருகின்றனர். 

அத்துடன், பட்டாசு நிறுவனத்திற்குப் பொறுப்பான நபர் மீது கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சீன அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

தொழிற்சாலை வளாகத்திற்குள் இருந்த இரண்டு வெடிமருந்து களஞ்சியசாலைகள் மீட்புப் பணிகளின் போது பெரும் அச்சுறுத்தலாக இருந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Post a Comment