இலங்கையை உலுக்கிய மற்றுமொரு சோகம்-15 வயது சிறுவன் பலி-பெற்றோர்களே மிகவும் அவதானம்

 

மாவனெல்லை, ஹேலிஸ்வத்த பகுதியில் மா ஓயாவில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 

இவ்வாறு உயிரிழந்தவர் மாவனெல்லைப் பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

 

உயிரிழந்த சிறுவனும் மற்றொரு சிறுவனும் மா ஓயாவில் நீராடிக்கொண்டிருந்த போதே, இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

 

சிறுவனின் சடலம் தற்போது அரநாயக்க வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மாவனெல்லை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment