சக்தி வாய்ந்த பிரதோஷம்-இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி{14.5.2026}

 


இன்று மே 14, 2026 சித்திரை மாதம் 31ம் தேதி வியாழக் கிழமை, மீனம், மேஷ ராசியில் ரேவதி, அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று மேஷம், ரிஷபம், மீனம் ஆகிய ராசிகளில் இரண்டிரண்டு கிரக சேர்க்கை நடக்கின்றன. புதாதித்ய மற்றும் லட்சுமி நாராயண யோகம் உருவாகும் நாள். இன்று சிம்ம ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று பிரதோஷம், சுபமுகூர்த்த தினம்.

மேஷம் ராசி பலன்
மேஷ ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய தொழில் மற்றும் வணிகத் துறையில் வெற்றியும், நல்வாய்ப்புகளும் அதிகரிக்கும். இன்று நீங்கள் உங்கள் வசதியை மேம்படுத்தும் சில பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டியவர்கள். பணியிடத்தில் வேலை முடிப்பதில் அர்ப்பணிப்பு மற்றும் நேர்மையுடன் பணியாற்றும். இன்று குடும்ப வாழ்க்கையில் உங்களுடைய விரைவில் அன்பும் இணக்கமும் நிறைந்ததாக இருக்கும். இன்று உங்கள் குடும்பத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். இன்று சோம்பலை விடுத்து சுறுசுறுப்பாக செயல்படுவது அவசியம். உங்கள் உணர்வுகளை நிதானமாக வெளிப்படுத்தவும்.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று நிதி விஷயங்களில் உங்களுக்கு சாதகமாக நாளாக இருக்கும். உங்களுடைய தொழிலை விரிவுபடுத்த எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனை தரும். சிலருடன் சேர்ந்து கூட்டணியாக செய்யும் விஷயங்கள் நல்ல முன்னேற்றத்தை தரும். இன்று புதிய நண்பர்கள் உங்களுக்கு கிடைப்பார்கள். உங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தவும் மகிழ்ச்சியாக நேரம் செல்ல விடவும் வாய்ப்புகள் அமையும். இன்று உங்களுடைய உடல் நலனில் கவனம் செலுத்துவது அவசியம். வேலை தொடராக சில சிரமங்களை சந்திக்க நேரிடும்.

மிதுனம் ராசி பலன்
மிதுனம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய தனிப்பட்ட உறவுகளில் கருத்து வேறுபாடுகளை சந்திக்க நேரிடலாம். மேலும் உறவுகள் மேம்பட பேச்சில் மற்றும் செயலில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. அதே சமயம் இன்று உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமிருந்து ஆதரவு கிடைக்காமல் போகலாம். சில விஷயங்களை உங்களை மனச்சோர்வடையச் செய்யலாம். வாழ்க்கையில் முன்னர் நீங்கள் சந்தித்த கடினமான அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு முன்னேறுவதே சிறந்தது. கடினமான காலங்களில் இன்று உங்களுக்கு விருச்சிக ராசியை சேர்ந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் உங்கள் உடல் மற்றும் மனதளவில் மிகவும் ஆற்றலுடன் உணர்வீர்கள். இன்று உங்கள் குடும்பத்தினருக்காக தாராளமாக செலவிடுவீர்கள். பணியிடத்தில் உங்களுடைய சக ஊழியர்களை ஊக்குவிப்பதில் உங்களுடைய ஆளுமை திறன் வெளிப்படும். என்பதை நீங்கள் எடுக்க வேண்டிய தொழில் முடிவுகள் தொடர்பாக சற்று குழப்பமாக இருப்பீர்கள். உங்கள் தனிப்பட்ட உறவு மேம்படும். இன்று உங்களுடைய கடினமான மனநிலையை மாற்றி ஆக்கபூர்வமாக செயல்படவும். இன்று உங்கள் மனம் எதிர்பார்த்த விஷயங்கள் நடக்கலாம்.

சிம்மம் ராசி பலன்
சிம்மம் ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் மற்றவர்கள் மீது அதிக எதிர்பார்ப்புகளையும், நம்பிக்கைகளையும் கொண்டிருப்பீர்கள். நீங்கள் எந்த ஒரு விஷயங்களையும் கவனமாக சிந்தித்து செயல்படவும். வேலை மற்றும் குடும்ப பொறுப்புகளால் சிரமம் ஏற்பட வாய்ப்பு உண்டு. வணிகம் தொடர்பாக முடிவுகளை இருப்பதில் குழப்பம் இருக்கும் என்பதால், நிதானமாக சிந்தித்து செயல்படவும். இன்று நீங்கள் எதிர்பார்த்த உச்சத்தை அடைய முயற்சிகளை அதிகப்படுத்தவும். வேலை தொடர்பாக சிரமங்களை சந்திக்க நேரிடும். இன்று பிறர் கூறக்கூடிய ஆலோசனையை கேட்டு நீங்கள் சரியான முடிவு எடுப்பது நல்லது.

கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் சூழல் வேகமாக மாறக்கூடியதாக இருக்கும். இன்று உங்களுக்கு புதிதாக வாய்ப்புகள் உருவாகும். அதை சரியாக பயன்படுத்துவதில் உங்கள் முயற்சிகளை அதிகப்படுத்தவும். இன்று சிலரின் செயல்பாடு அல்லது பேச்சு உங்களை காயப்படுத்த வாய்ப்பு உண்டு. இன்று உங்கள் எண்ணங்களை சரியாக வெளிப்படுத்துவது நல்லது. உங்களுக்கு விருப்பமான விஷயங்களை மட்டும் என்ன செய்வது நல்லது. இன்று புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். காதல் விஷயத்தில் மோதல்கள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று கடந்த கால பிரச்சனைகள் முடிவுக்கு வரும். ஒரு புதிய சூழல் மற்றும் மன நிலையை காண்பீர்கள். இன்று உங்கள் மனதில் இலகுவாகவும், நிம்மதியாகவும் உணர்வீர்கள். உங்களுக்கு தேடி வரக்கூடிய புதிய வாய்ப்புகளை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்க வேண்டும். இந்த சாமான்களை சமாளிக்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்ள முயற்சிக்கவும். இன்று நீங்கள் புதிய கண்ணோட்டத்துடன் எதையும் செய்வீர்கள். உங்களுடைய படைப்பாற்றலை மேம்படுத்தும். இன்று நீங்கள் உங்கள் வேலையில் கட்டுப்பாட்டுடன் செயல்படவும்.

விருச்சிகம் ராசி பலன்
விருச்சிகம் ராசி அன்பர்களுக்கு இன்று தனிப்பட்ட மற்றும் தொழில்முறை விஷயங்களில் ஆற்றலுடனும், தைரியத்துடனும் செயல்படுவது அவசியம். இன்று நீங்கள் எதிர்பார்த்த சில தீர்வுகள் அல்லது இலக்கங்களை எட்ட முடியும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சியான மனநிலை இருக்கும். இன்று உங்களுடைய தற்பெருமையை விடுத்து புதிய விடயங்களை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டவும். இன்று நிதி சார்ந்த விஷயங்களில் பட்ஜெட் போட்டு செயல்படுவது நல்லது. இன்று நீங்கள் உங்கள் மதிப்பு மற்றும் கொள்கைகளை பின்பற்றுங்கள்.

தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று எதிர்மறையான எண்ணங்களை விடுத்து எதிலும் நேர்மறையுடன் செயல்படவும். இன்றைய மனதளவில் சில தாக்கமும் அழுத்தத்தையும் சந்திப்பீர்கள். இன்று அனுபவம் வாய்ந்த சிலரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். அவருடைய ஆலோசனை உங்களுக்கு எதிர்காலத்தில் உதவும். தனிப்பட்ட வாழ்க்கையில் எந்த ஒரு வாக்குறுதிகளை அளிப்பது தவிர்ப்பது நல்லது. உங்களுடைய உள்ளுணர்வு மேம்பட யோகா, தியானம் போன்றவற்றை செய்வது நல்லது. இன்று நீங்கள் மேற்கொள்ளக்கூடிய பயணங்கள் வெற்றியை கொண்டுவரும். சிலருக்கு இடமாற்றத்திற்கான வாய்ப்புகள் உண்டு.

மகரம் ராசி பலன்
மகரம் ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் சில முக்கிய மாற்றத்தை பெற வாய்ப்பு உண்டு. உடல் மற்றும் மன நலனையும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்தவும். இன்று எந்த விஷயத்திற்காகவும் உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்கவும். கடந்த கால அனுபவங்கள் இன்று உங்களுடைய முன்னேற்றத்திற்கு உதவும். உங்கள் உணவு மற்றும் பானங்கள் எடுத்துக் கொள்வதில் கவனமாக இருக்கவும். இன்று உங்களுடைய உறவுகள் மற்றும் உணர்வுகளை மேம்படுத்துவதற்கான விஷயங்களில் ஈடுபடவும். உங்கள் உறவினர்களிடமிருந்து சில நல்ல செய்திகள் தேடி வரும்.

கும்பம் ராசி பலன்
கும்பம் ராசி அன்பர்களுக்கு இன்று கனவு உலகத்தில் இருப்பதைவிட நிகழ்கால விஷயங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றிக்கொள்ள இயலவும். இன்று உங்களுக்கு சில பொன்னான வாய்ப்புகள் அல்லது சிலருடைய அற்புதமான ஆலோசனை கிடைக்க வாய்ப்பு உண்டு. உங்களின் வேலை அல்லது தொழில் துறையை மாற்றம் செய்வதற்கான சில முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். இது போன்ற விஷயங்களும் உங்கள் வாழ்க்கையில் நம்பிக்கை ஒளியை கொண்டு வரும். ஆன்மீகத்தின் மீதான நாட்டம் அதிகரிக்க கூடிய நாள்.

மீனம் ராசி பலன்
மீனம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு அற்புதமான நாளாக இருக்கும். இன்று எதற்காகவும் தாழ்வு மனம் பன்மையுடன் செயல்பட வேண்டாம். இன்று உங்களுடைய தனிப்பட்ட மற்றும் தொழில் முறை சார்ந்த விஷயங்கள் மிகவும் சிறப்பான மற்றும் ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுவீர்கள். இன்று உங்கள் பெற்றோருக்கு, குருமார்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு கிடைக்கும். இன்று பிறரை அதிகமாக சார்ந்து இருப்பதை தவிர்க்க வேண்டியது அவசியம். இன்று பயணங்கள் மேற்கொள்வதில் கவனம் தேவை. இன்று சில விஷயங்களால் கிடைக்கக்கூடிய மகிழ்ச்சியுங்கள் மனதிற்கு புத்துணர்ச்சியை தரும்.

Post a Comment