திருக்கோவில் தம்பட்டை பாலத்தடியில் இடம்பெற்ற மோட்டார்சைக்கிள் விபத்து. வீதி எங்கும் சிதறிய மீன்கள்
அம்பாறை திருக்கோவில் தம்பட்டை பிரதேசத்தில் உள்ள பாலத்தில் இன்று காலை இரண்டு மோட்டார்சைக்கிள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இருவர் காயமடைந்ததுடன் மோட்டார்சைக்கிள்களும் பலத்த சேதமடைந்துள்ளது.
வியாபாரத்திற்காக மீன்களை ஏற்றிச் சென்ற மோட்டார்சைக்கிள் ஒன்று எதிரே வந்த மோட்டார்சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்ட மீன்கள் வீதி எங்கும் சிதறிக்காணப்பட்டது.


