இறந்த குழந்தை-தாய் வெளியிட்ட உண்மை

 

கணவன் மட்டக்களப்பில் வேலை! பண்டாரவளையில் பிறந்த சிசுவின் சடலம்! மனைவியின் அதிர்ச்சி வாக்குமூலம்!

பண்டாரவளை – பல்லகெட்டுவ கலப்பிட்டகந்த பகுதியில்  (23) சிசு ஒன்று சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பல்லகெட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.

பல்லகெட்டுவ பகுதியை சேர்ந்த 36 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மதியம் வீடொன்றுக்கு அருகாமையில் சிசு ஒன்று சடலமாக கிடப்பதாக பல்லகெட்டுவ பொலிஸாருக்கு தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. பின்னர் பல்லகெட்டுவ பொலிஸ் குழுவினர் சிசுவின் சடலத்தை மீட்டதோடு விசாரணைகளை ஆரம்பித்தனர்.

சந்தேகத்துக்கிடமாக சிசு கிடந்த இடத்துக்கு அருகில் உள்ள வீட்டில் இருந்த பெண்ணிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டபோது,

குறித்த சிசு கடந்த 17 ஆம் திகதி தனக்கே பிறந்ததாகவும் பிறக்கும்போதே இறந்து பிறந்ததால் தனது வீட்டு முற்றத்தில் சிறிய குழி தோண்டி புதைத்ததாகவும், சடலத்தை நாய் வெளியே இழுத்து போட்டுள்ளதாகவும் குறித்த பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

குறித்த பெண்ணின் கணவர் மட்டக்களப்பு பகுதியில் உள்ள வாகனம் கழுவும் இடத்தில் தொழில் செய்து வருவதாகவும், குறித்த பெண் ஆங்காங்கே கூலி வேலை செய்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகத்திற்கு உரிய பெண்ணை பண்டாரவளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும், சிசுவின் சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக பதுளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும்,

மேலதிக விசாரணைகளை பல்லகெட்டுவ பொலிஸ் பரிசோதகர் குலரத்ன தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருவதாகவும் பல்லகெட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.