பாடசாலை மாணவிகளுக்கு பல சந்தர்ப்பங்களில் ஆபாச காணொளிகளை காண்பித்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் செவ்வாய்க்கிழமை (20) கைது செய்யப்பட்டதாக நானுஓயா பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமை பரிசோதகர் ஜனக பண்டார தெரிவித்தார்.
பாடசாலை செல்லும் 11-14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு ஆபாச காணொளிகளை சந்தேக நபர் காண்பித்ததாக நானுஓயா பகுதியில் உள்ள பல பாடசாலையில் மாணவர்கள் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
மாணவிகளான சிறுமிகளிடம் இருந்து வாக்கு மூலத்தை பதிவு செய்ததுடன், நானுஓயா பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 56 வயதுடைய சந்தேக நபரை நுவரெலியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்
