இரவு மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பழைய கல்லடி பாலத்தில் இருந்து, #குதித்த யுவதி, பிரதேச இளைஞர்கள் மற்றும் பொலிசாரினால் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் #உயிரிழந்துள்ளார்.
குறித்த யுவதி தாழங்குடா பகுதியை சேர்ந்த 20 வயதையுடையவர் எனவும், கடந்த வருடம் உயர் தர பரீட்சை எழுதியவர் எனவும் தெரியவருகின்றது.
மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு வரலாற்றில் ஒரு முக்கிய அடையாளமாக விளங்கும் கல்லடி பாலம், இன்று #ம*னதை #உலுக்கும் சம்பவங்களால் #வே*தனையின் அடையாளமாக மாறிக் கொண்டிருக்கிறது.😥😥
மாற்றம் ஒன்றே மாறாதது - இன்று நீங்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை இன்னும் சில மாதங்களில் அல்லது ஆண்டுகளில் மிகச் சிறியதாகத் தோன்றும்.
உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு நீங்கள் எவ்வளவு முக்கியமானவர் என்பது உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். உங்கள் #இழப்பு அவர்கள் வாழ்நாள் முழுவதும் #ஆறாத #வடுவை ஏற்படுத்தும். உங்கள் பிரச்சனைகளுக்குத் இது ஒரு தீர்வு அல்ல,🙏🙏
