அம்பாறை - காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றிலுள்ள சுவாமி அறையில் நேற்று தூக்கில் தொங்கிய நிலையில் நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.
இவ்வாறு உயிரிழந்தவர் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றி வந்தத காரைதீவு - 12 பிரதான வீதியை சேர்ந்த 24 வயது மதிக்கத்தக்க நபர் ஆவார்.
காதல் விவகாரம் காரணமாக இவர் உயிர்மாய்த்திருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவரின் மரணம் தொடர்பில் சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் பணிப்புரைக்கமைய, திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச்.அல்-ஜவாஹிர் முன்னிலையில் மரண விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, தூக்கில் தொங்கியதால் மூச்சு திணறல் ஏற்பட்டு, மரணம் சம்பவித்துள்ளதாக குறிப்பிட்டு சடலம் உறவினர்களிடம் நேற்று மாலை கையளிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் காரைதீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
.jpeg)