மட்டு கல்லடிப் பாலத்திலிருந்து குதித்த தாழங்குடா பகுதியைச் சேர்ந்த யுவதி உயிரிழப்பு
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி பழைய பாலத்தில் இருந்து நேற்றிரவு (23) 7 மணியளவில் குதித்த யுவதி ஒருவரை பிரதேச இளைஞர்கள் மற்றும் பொலிசார் மீட்டெடுத்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தாழங்குடா சமூர்த்தி வங்கி வீதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளங்கோ விதுசாயினி எனும் யுவதி என அடையாளங்காணப்பட்டுள்ளது
இவர் கடந்த வருடம் உயர் தர பரீட்சை எழுதியவர் எனவும் தெரிய வருகின்றது.
மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



