அம்பாறை – மத்தியமுகாம் பொலிஸ் பிரிவிற்குட்ட பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் வீரகொட பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவருக்கும் ஏனைய இரண்டு நபர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், தலையில் தடியால் தாக்கப்பட்டமையால் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சடலம் மத்திய முகாம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
