வயல் வேலையை முடித்து விட்டு வீடு திரும்பும் போது உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் 4 பிள்ளைகளின் தந்தை பலி - மட்டக்களப்பில் சம்பவம்
வவுனதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாவற்கொடிச்சேனை பகுதியை சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தை ஒருவர் தனது வயலில் உழவு வேலையை முடித்து விட்டு வரம்பு வழியாக உழவு இயந்திரத்தை செலுத்திய வண்ணம் வந்துகொண்டிருக்கும் போது உழவியந்திரம் குடைசாய்ந்ததில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
உயிரிழந்தவர் பாவற்கொடிச்சேனை கண்ணகி நகரைச் சேர்ந்த முத்துப்பிள்ளை கருணாநிதி எனும் 51 வயதான 4 பிள்ளைகளின் தந்தையாவார்.
