மஸ்கெலியாவில் குளவி கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்த 79 வயது பெண்ணின் உடலம் உறவினரிடம் ஒப்படைப்பு.
நேற்று முன்தினம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்சீக் தோட்ட புரவுன்சீக் பிரிவில் உள்ள மாரிமுத்து லெட்சுமி வயது 79 நேற்று முன்தினம் காலை விறகு சேகரிக்க சென்ற வேளையில் சட்டி குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு மாற்றம் செய்ய பட்டார்.
அவ்வாறு மாற்றம் செய்ய பட்டவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார் என வைத்திய சாலையில் உள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த இரண்டு நாட்களாக வைத்திய சாலையில் தங்கி சிகிச்சை பெற்றதால் உடற் கூற்று பரிசோதனை இன்றி உடலம் உறவினரிடம் ஒப்படைக்க பட்டு உள்ளது.
மஸ்கெலியா நிருபர்.