மட்டக்களப்பில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு
இன்று மட்டக்களப்பு களுவன்கேணி புகையிரத கடவையில் புகையிரதத்தில் மோதுண்டு 26 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.
மோட்டார்சைக்கிளில் பயணம் செய்த குறித்த நபர் ரயில் வரும் வேளையில் தண்டவாளத்தை கடக்க முற்ப்பட்ட வேளையிலே ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகி தனது உயிரை இழந்துள்ளார்
சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.