மட்டக்களப்பில் ஒரே நேரத்தில் இரு இடங்களில் மர்மமாக இடம்பெற்ற சம்பவம்! சற்றுமுன் வெளியான தகவல்


வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பகுதியில் ஒரே நேரத்தில் இரு வேறு இடங்களில் தீ விபத்து நேற்று (15) மாலை இடம்பெற்றது.

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்கு அருகிலுள்ள காணி மற்றும் புகையிரதம் செல்லும் ஓட்டமாவடி பழைய பாலத்தின் புகையிரதப் பாதை ஆகியவைகளில் தீப்பரவல் ஏற்பட்டது.

ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்கு அருகிலுள்ள காணியில் குப்பைகளுக்கு தீ வைக்கும் போததே அங்கு தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அதேவேளை, ஓட்டமாவடி பழைய பாலம் புகையிரத வண்டி மாத்திரம் செல்லுவதற்கு பயன்படுத்தப்படும் பாதையாகும் அந்த பாலத்தினூடாக வேறு வாகனங்கள், பாதசாரிகள் எவரும் பயணிக்காத நிலையில் மர்மமான முறையில் தீ பிடித்துள்ளது.

இரு இடங்களிலும் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

சம்பவ இடத்திற்கு பிரதேச செயலாளர் ஏ.தாஹிர், பிரதேச சபை செயலாளர் வாழைச்சேனை போக்குவரத்து பொலிஸார் ஆகியோர் வருகை தந்து தீ பரவியதற்கான காரணத்தை கண்டறிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.